மனசை எல்லாம் கோவிலாக்கிப்புட்டேன்.....By இயற்கை


மனசை எல்லாம் கோவிலாக்கிப்புட்டேன்
உடம்பெல்லாம் கோபுர வாசலாக்கிப்புட்டேன்
குடி இருக்க வாடி
கும்பிட்டுப் போகட்டும் கோடி

போக்குவரத்தில் சந்தித்தோம்
ஒரு பத்து நிமிஷம் ஒட்டிக்கிட்டோம்
அருகிருந்தும் ஆண்டுக்கணக்கா காண்கலையே...
பேரு நெம்பர் தெரியலையே....

ஒன்னை மாரி நேசிச்ச ஓருசுரு
எனக்கிப்ப ரொம்ப அவசரம் அவசியம்
எனக்கு மட்டும் ஏன் இந்த அவலம்
எப்போதும்,
போயிடுச்சு எண்ணமெல்லாம்
ஏறாமலே நரை விழுந்து மாறாமலே...

என்ன உறவு இது வெளிச் சொன்னா
புனிதக் கோடா புரியாத பாடா
உள்ளுக்குள்ளே புதைஞ்சுக் கிடக்கு
புழுவா ஊர்ந்து மேயுது...
உனக்கும் எனக்கும் அப்படி ஒரு  நெருக்கம்

இதுவரைக்கும் யார் மேலும் இல்லை
எனக்கு இப்படிப்பட்ட கிறக்கம்
பொருத்தம்னா இதுதானே பொருத்தம்
 ஆனா   நெருங்கத்தான் வழியே இல்ல நிறுத்தம்...

ஜென்மம் போயிடும் உன் ஞாபகத்தில
நாம் சேரவே மாட்டோம் ஜாதகத்தில
இயற்கையா வந்த பூலோகத்தில
இனிமேலா  கெடைக்கபோவுது நம் வாழ்க்கையில

போகட்டும் விடு உசுரு
அது வரைக்கும் வேகட்டும் விடு நம் நினைப்பு
சொல்ல மொழி இல்ல
புரிஞ்சக்கவும் யாரும் இல்ல..
ஒன்னைத் தவிர
 இந்த கவிதையை
யாரிடம் சொன்னாலும் அது களங்கம்
உனக்கும் எனக்கும் களங்கம்
நம் வாழ்க்கை என்றும் கலங்கும்

கலங்கிப் போன குட்டையில்
காமத்து மீனுங்க எனக்குத் தூண்டி போடுது
நாமத்த சாத்தி நானும்
வெறும் நாளையே கடத்தி வாரேன்..

என்றாவது நம் சந்திப்பு
மறுபடியும் நிகழுமா என
எதிர்பார்த்து பொழுதையும் கடத்தி போறேன்
உன் ஊர் வழிதான் நிதமும் கடந்து போறேன்.

முடிக்க முடியலை வார்த்தையை முடிக்க முடியலை
ஒரு வார்த்தையும் நிக்க வழியில்ல
உனக்கு ஒரு வார்த்தையும் சேர்க்கவும் வழியில்ல..

அட அன்னைக்கு பேரு கேக்காம வந்தேனே
அட உன் நெம்பரையும் கேக்காம வந்தேனே
அடுத்த தீபாவளியின் துணிப்பையுடன் நெருங்கி வந்த
உன் உடையானும் நம் நெருக்கம் கண்டான்

ஓடுக்கிக் கொண்டேன் எல்லா வற்றையும்
ஒன் துணிச்சலை மட்டும் பார்த்து அசந்தேன்
என்னால இரு வாழ்வு பாழாகாது
ஆனாலும் பைத்தியமா ஒன்னை
பாக்க நினைக்குது மனசு...ஒன் வீட்டை
ஒன் பள்ளியை, தேட நினைக்குது

நெனப்பு, தடுக்குது தடுக்குது வயசு..இல்லைன்னா
வந்திருப்பேன் பைத்தியமா அலைஞ்சு
உன்னை பார்க்க அலைஞ்சிருப்பே
காற்றில விட்ட காகிதமா...

அடங்க மறுக்குது, ஆட்டி வைக்குது
ஒரு சுழிக்காற்று , உன் பேரில்லாத
உன் நெனப்பு புயல் காத்து....
எண்ணம் சேர்க்கும் சொல்றாங்க
நம்மையும் மறுபடியும் பாக்க வைக்காதா...
தனியே அது போல மறுபடியும் ஒரு நா
சேர்க்க வைக்காதா...

படி ஏறத்தான் பார்க்கிறேன்
மடி சாயத்தான் நெனக்கிறேன்
மரண மடி போவதற்குள்
தலை நிரந்தரமா சாய்வதற்குள்...

மறுபடியும் ஒரு நா பாக்க வேணும்

அது வரை இதே நெனப்பில்
வேக வேணும்...

எப்படி சொல்றது: எங்க சொல்றது\
எல்லா தப்பும் இதை தப்புன்னு சொல்லுமே...

     இதுதான் காதல்னு
இப்பதான் உணர்ந்துகிட்டேன்
இதுவரை கண்டதெல்லாம் நோக்கம் கொண்டது
வாழ்க்கை வசதிக்கானது
இதுதான் எதிர்பார்ப்பே இல்லாத காதல்

அதனால்தான் பெரிதும் எதிர்பார்க்குது பாழும் எண்ணமும் மனசும்
மிக அதிகமா மிக மிக அதிகமா...
சட்டமும் நாட்டு நீதியும்
 அதை சரின்னு சொன்னாலும்
 நியாயம் தடுக்குதே
 வளர்ந்த சுபாவம் தடுக்குதே
 குடும்பம் இடிக்கிதே
 குலம், பாரம்பரியம்
 எல்லாம் காலைக் கட்டுதே
  கண்ணைச் சுற்றுதே...

 இரகசியம் காக்கவும் முடியாம
 இரகசியம் காக்கவும் தெரியாம
 இரகசியமா இருக்கவும் முடியாம
  இதெல்லாம்தான் உயிர் படும் பாடு...
 நீ இருப்பதே வேறு ஒரு கூடு
 இங்கிருப்பதோ உடல் என்னும் கூடு
 என்று சேரும் நமது கூடுகள் வீடடங்காது...


 இயற்கை


Image result for lightnings and rainbow

Comments

Popular posts from this blog

ஒன் நெனப்பு

ஆரிடம் சொல்வது காலத்தின் சூழ்ச்சியை....

ஒரு கூட்டுப் புழு பருவம்..