Posts

Showing posts from November, 2018

ஒன் நெனப்பு

Image
மின் மினியாய் அந்து வானக் காட்டில் மின்னிக் கொண்டிருக்கிறது ஒன் நெனப்பு எல்லையில்லாக் காட்டில் எல்லாப் பக்கமிருந்தும் ஏணி வைத்து ஏறிக் கொண்டிருக்கிறது ஒன் நெனப்பு விண்ணுயர ஏறிப் போனாலும் புவி ஈர்ப்புடன் பூமிக்கே இழுக்குது ஒருநெனப்பு அது ஒன் நெனப்பு... இன்னும் சொல்ல சொல்ல வார்த்தையில்லா வார்த்தை வரா வாழ்வுப்பயணம் எங்கெங்கோ முடிந்து போகலாம் என்பதற்குள் வாழ்த்தி வளர்ந்து நிக்குது ஒன் நெனப்பு...     ...இயற்கை

ஒரு கூட்டுப் புழு பருவம்..

Image
பாலியல் வேறுபாடு உணருமுன்னே சிறிய காம அரும்பு முளைவிடுமுன்னே தியானம் செய்யக் கற்றிருந்தால், பிரமசாரியத்துக்காக விரதம் இருந்திருந்தால், காத்திருந்த இலக்கை எட்டியிருப்பேன்... ஆனால் ஏழாவது எட்டாவது படிக்கும் முன்பே  சில தீய சேர்க்கை உள்ளவர்களுடன் நட்பு ரீதியாக சேர்ந்து அவர்கள் இலவசமாக கூட்டிக் கொண்டு போகிறார்கள் என ஹிந்தி சினிமாவுக்கும் கூட சென்றது இன்னும் நினைவு இருக்கிறது ஏழாம் வகுப்பு படிக்கும்போதிருந்துதான் பாலியல் பற்றியும் ஆண் பெண் பற்றியும் வேறாக நினைக்க ஆரம்பித்தது. அப்போது வயது சுமார் 12. அப்போது முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் வயது வரைதான் அதாவது 13 வயது வரைதான் வகுப்பில் முதலாவதாக மதிப்பெண் பெறுவதில் இடம் பிடித்தது. அதன் பின் சிலருடன் மன்றம் என்றும், கதைப்புத்தகம் என்றும் தொடர்கள் என்றும் மனப்பாடம் செய்து படிப்பதை தவறு என்றும், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போல அடித்தொண்டையில் கட்டைக்குரலில் அதேபோல தொனியில் பேசிக் கொண்டும் திரிந்து சாதாரண மான மாணவராக மாறி இருந்தேன். திப்பு சுல்தான் கரடு எல்லாம் சென்றோம் வீட்டில் மதிப்பெண் பட்டியலில் கை எழுத்துப் போடாமல் இருந்த  காரணம் பற்

மனசை எல்லாம் கோவிலாக்கிப்புட்டேன்.....By இயற்கை

Image
மனசை எல்லாம் கோவிலாக்கிப்புட்டேன் உடம்பெல்லாம் கோபுர வாசலாக்கிப்புட்டேன் குடி இருக்க வாடி கும்பிட்டுப் போகட்டும் கோடி போக்குவரத்தில் சந்தித்தோம் ஒரு பத்து நிமிஷம் ஒட்டிக்கிட்டோம் அருகிருந்தும் ஆண்டுக்கணக்கா காண்கலையே ... பேரு நெம்பர் தெரியலையே .... ஒன்னை மாரி நேசிச்ச ஓருசுரு எனக்கிப்ப ரொம்ப அவசரம் அவசியம் எனக்கு மட்டும் ஏன் இந்த அவலம் எப்போதும் , போயிடுச்சு எண்ணமெல்லாம் ஏறாமலே நரை விழுந்து மாறாமலே ... என்ன உறவு இது வெளிச் சொன்னா புனிதக் கோடா புரியாத பாடா உள்ளுக்குள்ளே புதைஞ்சுக் கிடக்கு புழுவா ஊர்ந்து மேயுது ... உனக்கும் எனக்கும் அப்படி ஒரு   நெருக்கம் இதுவரைக்கும் யார் மேலும் இல்லை எனக்கு இப்படிப்பட்ட கிறக்கம் பொருத்தம்னா இதுதானே பொருத்தம்   ஆனா    நெருங்கத்தான் வழியே இல்ல நிறுத்தம் ... ஜென்மம் போயிடும் உன் ஞாபகத்தில ‌ நாம் சேரவே மாட்டோம் ஜாதகத்தில ‌ இயற்கையா வந்த பூலோகத்தில ‌ இனிமேலா   கெடைக்கபோவுது நம் வாழ்க்கையில ‌ போகட்டும் விடு உசுரு அது வரைக்