ஒன் நெனப்பு
மின் மினியாய் அந்து வானக் காட்டில்
மின்னிக் கொண்டிருக்கிறது
ஒன் நெனப்பு
எல்லையில்லாக் காட்டில் எல்லாப் பக்கமிருந்தும்
ஏணி வைத்து ஏறிக் கொண்டிருக்கிறது
ஒன் நெனப்பு
விண்ணுயர ஏறிப் போனாலும் புவி ஈர்ப்புடன்
பூமிக்கே இழுக்குது ஒருநெனப்பு
அது ஒன் நெனப்பு...
இன்னும் சொல்ல சொல்ல வார்த்தையில்லா
வார்த்தை வரா வாழ்வுப்பயணம்
எங்கெங்கோ முடிந்து போகலாம் என்பதற்குள்
வாழ்த்தி வளர்ந்து நிக்குது
ஒன் நெனப்பு...
...இயற்கை
Comments
Post a Comment