ஆரிடம் சொல்வது காலத்தின் சூழ்ச்சியை....

ஆரிடம் சொல்வது: அழகு தாஸ்


Related image

அது ஒரு விமானப் பயணம். அவன் அவராக மாறி வரும் பருவம். அவளுக்கும் அப்படி ஒன்றும் இளம் பருவமல்ல... பருவம் கடந்து மத்தியப் பிரதேச வாழ்வு நிலைதான்.

பேர் தெரியாது
ஊர் தெரிந்தாலும் சரியாகத் தெரியாது
பணி தெரியும் என்றாலும்
இடம்  தெரியாது.

இருவரும் அடிக்கடி ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் பார்த்த நினைவு

வேண்டுமென்றே அது நடக்க வில்லை. வேண்டியபடி நடந்ததோ என்னவோ. அருகருகே இருக்கை.

நான் உங்களைப் பார்த்திருக்கிறேன்.
என்ன செய்கிறீர்... கற்பிக்கும் பணிதான்...

எங்கே
சொன்னாள்

எங்கே வீடு
சொன்னாள்

அதன் பிறகு இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவே இல்லை

அது போன்ற பொருத்தமுடைய ஒரு பெண்ணை  வாழ்வில் கண்டதில்லை.அவள் மிகவும் உரிமையுடனும் தோழமையுடனும் சாய்ந்து கொண்டாள்...இந்தப் பயணம் நீடிக்காதா என்னும்போதே அந்தப் பதினைந்து மணித் துளி பயணம் நிறைவுக்கு வர பூர்வீக சொந்தம் ஒன்று புறப்பட்டது போலிருந்தது.
 அது போல் ஒரு அழகை அழகின் ஈர்ப்புடன் கண்டது கிடையாது. இனி காணமுடியுமா என்பதும் அன்று அவனுக்குத் தெரியாது...ஆனால் அப்போது நினைத்தான் அது அடிக்கடி தொடரும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று... ஆனால்...
Related image
இடம் வந்த அடையாளத்திற்காக அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு நகர்ந்து கொன்டு இயல்பாக்கிக் கொண்டாள் ...அது தெரிந்தவர்கள் இருப்பார் அவர் முன் தன்னை தானாக ஆக்கிக் கொள்ள என்பது போலிருந்தது..

அடுத்த நாளிலிருந்தே அவன் பயணத்தின் முறை மாறியது.
ஆனாலும் அந்த இதயத்தின் அந்தரங்க சங்கீதம் கேட்டுக் கொண்டே இருந்தது
அந்த ஊரை விண்ணூர்தி தாண்டும்போது
அந்த அவள் ஏறிக் கொண்ட இடத்தை வானூர்தி தொட்டு இறக்கி ஏற்றும்போது

ஆனாலும் அதன் பின் இருவருமே எப்போதுமே சந்திக்கவில்லை.
ஆண்டுகள் சில ஓடின...
Related image
ஒரு திருவிழாக் குறிப்பிடும் காலம்  உடன் அவன் கணவன் இருந்த போதும் அவளின் ஈர்ப்பு அவனிடம் இருந்ததை பலவகையான செயல்பாடுகள் உறுதிப்படுத்த அந்தப் பயணமும் கழிந்தே போனது...

ஆனாலும் அது என்ன பந்தம் அது எப்படிப்பட்ட சொந்தம் கனவுகளுடன் கற்பனைகளுடன் ஆண்டுகள் அடி எடுத்து ஓடிக் கொண்டிருக்க‌

அட அவள் பேராவது கேட்டோமா ....இல்லை
அவளது எண்தான் கேட்டு குறித்தோமா...இல்லை...

நம்மைதான் நாம் தொடர்பு கொள்ள ஏதாவது செய்தோமா ...இல்லை

அப்புறம் ஏன் இந்த நினைவு படுத்தியபடியே தொடர்ந்து வருகிறது...

வாழ்வு...அப்படித்தான் நீண்டு வரும் பின் நாட்களில் நாம் தொடுத்துக் கொள்ள‌லாம் என்று நம்பியதை  கைக்கெட்டாமலே செய்து போய்க் கொண்டே இருக்கிறது.

இருந்தாலும் அது உண்மையாக இருந்தால், இயற்கை விரும்பினால் இன்னொரு நாள் உறுதியாக இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் ...
Image result for beautiful and fantastic woman in indian look
அது வரை அந்த முகம் நினைவிருக்குமோ
அப்போதும் அந்த நினைவுகள் மறவாதிருக்குமோ
அப்போதும் அருகே சென்றால் அந்தப் பூக்கள் தங்களை மலர்த்திக் கொண்டு சூடிக்கொள்ள இடம் கொடுக்குமோ...

எவரறிவார் காலத்தின் சூழ்ச்சியை...

Comments

Popular posts from this blog

ஒன் நெனப்பு

ஒரு கூட்டுப் புழு பருவம்..